மலரே என்னிடம் மயங்காதே – 16Click to this video!

(malarae ennidam mayangathae )

Raja 2014-02-26 Comments

என்னாச்சு இப்போ.. ஏன் டென்ஷனா இருக்குற..?” நான் சற்று சாந்தமாகவே கேட்டேன்.

“ட்ரான்ஸ்ஃபர் கேட்டிருக்கியாமே..?”

“உனக்கு யார் சொன்னா..?”

1

“யார் சொன்னா என்ன..? உண்மையா.. பொய்யா..?”

“ம்ம்.. உண்மைதான்..!! அதுக்கென்ன..?”

“அதுக்கு என்னவா..? எப்புடி அசோக்கு இப்டிலாம் உன்னால பேச முடியுது..?” அவர் நிஜமாகவே நொந்து போனவராய் கேட்டார்.

“எனக்கு வேற வழி தெரியலை பன்னீர்..” நான் விட்டேத்தியாக சொன்னேன்.

“அதுக்காக.. ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு ஓடிப்போயிட்டா.. எல்லாம் சரியாயிடுமா..?” அவருடைய குரல் இப்போது சற்று காட்டமாக ஒலித்தது.

“இங்க பாரு பன்னீர்.. என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியாது..!!”

“ஆமாம்.. தெரியாதுதான்..!! ஆனா.. என்ன நடந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியும் அசோக்கு..!! மலரை நீ விரும்ப ஆரம்பிச்சுட்ட.. அவகிட்ட நீ தோத்துப்போயிட்ட..!! ஆனா.. அதை ஒத்துக்க மனசு வராம.. அவளுக்கு பயந்து இப்போ ஊரை விட்டு ஓட முடிவு பண்ணிருக்குற..!!”

“நான் யாருக்கும் பயந்து ஓடலை..”

“பின்ன இதுக்கு பேர் என்ன..?”

“நான் என் நிம்மதி தேடி போறேன்..”

“உன் நிம்மதி மட்டுந்தான் உனக்கு முக்கியம்.. இல்ல..?” அவர் விடாமல் என்னை துளைத்தெடுக்க, நான் இப்போது தளர்ந்து போனேன்.

“என்னை என்னதான் பண்ண சொல்ற..?”

நான் அப்படி பரிதாபமான குரலில் சொல்ல, இப்போது பன்னீரும் சோர்ந்து போனார். என்னையே அமைதியாகவும், இரக்கமாகவும் ஒரு பார்வை பார்த்தார். அப்புறம் மெல்ல.. எனக்கு எதிரே கிடந்த சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு, அமர்ந்தார். மிக மிக சாந்தமான குரலில் மீண்டும் ஆரம்பித்தார்.

“இங்க பாரு அசோக்கு.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..”

“சொ..சொல்லு..”

“கயலை மறந்துடு அசோக்கு.. மலரை கட்டிக்கோ.. உன் மனசுல இருக்குற உறுத்தல்லாம்.. கொஞ்ச நாள்ல காணாம போயிடும்..!! நாம எல்லாருமே ஒண்ணா.. சந்தோஷமா இருக்கலாம் அசோக்கு..!!”

“அது என்னால முடியாது பன்னீர்..” நான் வெறுப்பாக சொல்ல, பன்னீர் மீண்டும் டென்ஷனானார்.

“ப்ச்.. ஏண்டா இப்படி அடம் புடிக்கிற..? கேட்டா.. அவளை தவிர வேற யாருக்கும் என் வாழ்க்கைல எடம் இல்ல.. அவ மேல சத்தியம் பண்ணிருக்கேன்.. துரோகம்.. அது இதுன்னு சொல்லுவ..?”

“…………..” நான் அமைதியாக இருந்தேன்.

“ஒன்னு தெரிஞ்சுக்கோ அசோக்கு.. ஒரு வருஷத்துல அவ உன்னை இப்படி தவிக்க விட்டுட்டு போவான்னு தெரியாம.. நீ அப்போ செஞ்ச அந்த சத்தியத்துக்கு.. இப்போ எந்த மதிப்பும் இல்ல..!! அவ கூடவே அதுவும் சேர்ந்து போயிடுச்சு..!!”

“எனக்கும் இப்போ அந்த சத்தியம்லாம் பெருசா தெரியலை பன்னீர்.. எனக்கு இருக்குற பிரச்னை உனக்கு புரியலை..!! என் வாழ்க்கையை இன்னொரு பொண்ணோட பங்கு போட்டுக்குறதை என்னால நெனச்சுக்கூட பாக்க முடியலை..!!”

“சும்மா வறட்டுப் புடிவாதம் புடிக்காத அசோக்கு..”

“மனசுக்கு பிடிக்கலைன்னு சொல்றது.. பிடிவாதமா தெரியுதா உனக்கு..?”

“செத்துப் போனவளை நெனச்சுக்கிட்டு.. உயிரோட இருக்குறவங்களை வதைக்கிறது மட்டும் நியாயமா தெரியுதா உனக்கு..?”

“நீ என்னவேணா நெனச்சுக்கோ பன்னீர்.. எனக்கு கவலை இல்லை.. என் முடிவுலயும் எந்த மாற்றமும் இல்லை..!! நான் போறது போறதுதான்..!!”

நான் தீர்மானமாக சொல்ல, பன்னீர் வாயடைத்துப் போனார். இன்னும் என்ன சொல்லி இவன் மனதை மாற்றுவது என்று தெரியாமல் குழம்பி, களைத்துப் போனார். என் முகத்தையே கொஞ்ச நேரம் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் நீளமாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்துவிட்டு, தளர்ந்து போன குரலில் சொன்னார்.

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சரிப்பா.. பண்ணு..!! உன் இஷ்டப்படி என்னவேணா பண்ணு..!! ஆனா ஒன்னு..”

என்று அவர் சற்றே நிறுத்த, நான் இப்போது நிமிர்ந்து அவரை கேள்வியாக பார்த்தேன். அவர் தொடர்ந்தார்.

2

“அப்பா, அம்மா இல்லாம நீ பட்ட கஷ்டத்தை.. உன் புள்ளையும் அனுபவிக்கட்டும்னு நெனச்சுட்ட..!! கயலோட ஆன்மான்னு ஒன்னு இருந்து.. அது மேல இருந்து இதெல்லாம் பாத்துட்டு இருந்ததுன்னு வச்சுக்கோ.. நீ செய்றதுலாம் பாத்து சத்தியமா அது சந்தோஷமா இருக்காது..!!”

அவர் அழுத்தம் திருத்தமாக அந்த வார்த்தைகளை என் மீது எறிந்துவிட்டு, எழுந்து சென்றார். அவசரமாக சென்று கதவு திறந்து, அறையை விட்டு வெளியேறினார். அவர் சொன்ன வார்த்தைகள் என் இதயத்தில் ‘சுருக் சுருக்’கென்று குத்துவது மாதிரி இருந்தது. அந்த வலி தந்த வேதனையில்.. நான் திகைத்துப் போய் அப்படியே அமர்ந்திருந்தேன்..!! அவர் அள்ளி வீசிச் சென்ற வார்த்தைகளில் நான் சற்றே குழம்பிப் போனேன்.

பன்னீர் சொல்வதில் எந்த அளவு நியாயம் இருக்கிறது..? மன உறுத்தல் கொஞ்ச நாட்களில் மறைந்து விடும் என்கிறாரே.. அது எந்த அளவுக்கு சாத்தியம்..? கயல் ஏற்படுத்தி சென்றிருக்கும் தாக்கம், என் மனதை விட்டு மறைவது அவ்வளவு எளிதா..? என்னுடைய இந்த முடிவு, அபியின் வளர்ச்சிக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்த போகிறது..? ஒருவேளை நான் தவறு செய்கிறேனோ..? கயலுடைய ஆன்மா என்னை விரும்புமா.. வெறுக்குமா..?? நிறைய கேள்விகள்.. திரும்ப திரும்ப மனதில் முளைத்த பதிலற்ற கேள்விகள்..!!

இந்த மாதிரி ஒரு குழப்ப மனநிலையில்.. என்னுடைய முடிவு சரியா தவறா என்று எனக்குள்ளேயே பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில்.. மலர் அடுத்த நாள் இந்தப் பிரச்னையை வேறுபக்கமாக திசை திருப்பினாள்..!! அது நான் எதிரே பார்த்திராத.. வேறு மாதிரியான உணர்ச்சி அலைகளை.. என் உள்ளக்கடலில் பொங்கச் செய்தது..!!

அடுத்த நாள் ஆபீசில் இருந்து கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன். நான்கு மணிக்கெல்லாம் ஆபீசில் இருந்து காரைக் கிளப்பி, தரமணி ரோட்டில் விரட்டியவன், ஐந்தே நிமிடங்களில் விஜயநகர் பஸ் ஸ்டாண்டை அடைந்தேன். காரை செலுத்திக்கொண்டே, எதேச்சையாக பஸ் ஸ்டாப் பக்கம் பார்வையை வீசியவன், சற்றே ஆச்சரியப்பட்டுப் போனேன். அங்கே நிழற்குடைக்கு கீழே மலர் நின்றிருந்தாள். இரண்டு கைகளாலும் கைப்பையை இறுக்கிப் பிடித்தவாறு, பஸ் வரும் திசையை தலையை நிமிர்த்தி வெறித்துக் கொண்டிருந்தாள்.

இந்த நேரத்தில் இவள் என்ன செய்கிறாள் இங்கே..?? அவள் கையில் அபியை வேறு காணோம்..?? எனக்கு புரியவில்லை..!! காரின் வேகத்தை குறைத்து, நிழற்குடையை தாண்டி ஓரமாய் நிறுத்தினேன். இரண்டு முறை ஹார்ன் அடித்தேன்..!! ஓரிரு வினாடிகளிலேயே மலர் திரும்பி காரை கவனிப்பதும், அப்புறம் சற்றே வேகமாக நடை போட்டு, காரை நோக்கி வருவதும் ரியர்வ்யூ மிரரில் தெரிந்தது.

முன்பக்க கார்க்கதவை திறந்து, மலர் எனக்கு அருகே அமர்ந்தாள். அமர்ந்ததுமே.. ‘உஷ்ஷ்ஷ்… ப்பா…’ என்று உதடுகளை குவித்து ஊதி.. சென்னை வெயிலின் உஷ்ணம் அவளுக்கு ஏற்படுத்தியிருந்த எரிச்சலை.. எனக்கு உணர்த்தினாள்..!! புடவைத்தலைப்பால் நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை ஒற்றி எடுத்தாள்..!! நான் இப்போது என் இடது கைநீட்டி.. கருப்பாய் இருந்த ஒரு குமிழ் திருகி.. காருக்குள் ஏ.ஸி-யின் அளவை அதிகரித்தேன்..!! முகத்தை துடைத்துக் கொள்ளும் அவளையே ஓரக்கண்ணால் பார்த்தேன்..!! வெயிலில் அலைந்து திரிந்து அவள் களைத்திருந்தும்.. அது கூட அவளுடைய முகத்துக்கு ஒரு புதுவித கவர்ச்சியை கொடுக்கிறதே.. அது எப்படி..??

“என்னத்தான்.. அப்படி பாக்குறீங்க..?”

“அ..அது.. அது.. ம்ஹ்ஹ்ம்.. ஒண்ணுல்ல..!! வெ..வெளில பயங்கர வெயிலா..??”

“ஆமாம்.. தாங்க முடியலை..!! கொஞ்ச நேரம் அப்படியே நின்னோம்னா.. பொசுக்கி சாம்பல் ஆக்கிடும் போல..?”

அவள் சலிப்பாக சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, நான் காரை கிளப்பினேன். கியர் மாற்றி காரின் வேகத்தை அதிகரித்து, பள்ளிக்கரணை செல்லும் சாலையில் செலுத்தினேன். கார் சீரான வேகத்தில் சீற.. நான் சாலையை பார்த்துக்கொண்டே, மலரிடம் இயல்பான குரலில் கேட்டேன்.

“ம்ம்ம்…!! ஆ..ஆமாம்.. நீ என்ன இங்க தனியா..? அபியை எங்க..?”

“நான் வர்றப்போ நல்லா தூங்கிட்டு இருந்தான்.. எழுப்ப மனசு வரலை.. அதான்.. ஷ்யாம் அம்மாட்ட கொடுத்து பாத்துக்க சொல்லிட்டு வந்தேன்..”

“ஓ..!! நீ என்ன விஷயமா வந்த..?”

“ஒரு ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண வந்தேன்..”

“ட்ரெயின் டிக்கெட்டா..?? யாருக்கு..??”

“எனக்குத்தான்..!!”

“எங்க போறதுக்கு..?”

“என் காலேஜ் மேட் ஒருத்தி.. அஹமதாபாத்ல இருக்குறாத்தான்..!! நான் அங்க போனா.. அவ ரூம்லேயே தங்கிக்கலாம்.. அவ கம்பெனிலயே எனக்கு வேலை வாங்கித் தர்றதா சொல்றா..!! நான் போயிடலாம்னு இருக்கேன்..!!”

சாதாரணமாக அவள் சொல்ல, சடன் ப்ரேக் அடித்து நான் காரை நிறுத்தினேன்..!! அதிர்ந்து போனவனாய் அவளை திரும்பி பார்த்தேன்..!! திணறலாக கேட்டேன்..!!

Comments

Scroll To Top